மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது

கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-25 18:45 GMT

ஓசூர்

கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் சிப்காட் போலீசார் பல்லூர் கூட்டு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 16 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதுகுறித்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் குருபரப்பள்ளி அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்த அஸ்பகான் (வயது 25) என்பதும், கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார்சைக்கிள், குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்