மாணிக்கவாசகர் மடத்தில் குரு பூஜை
வேதாரண்யம் மாணிக்கவாசகர் மடத்தில் குரு பூஜை நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மேல வீதியில் மாணிக்கவாசகர் மடத்தில் குருபூஜை நடந்தது. இதைமுன்னிட்டு மாணிக்கவாசகர் திருவுருவ படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக ஓதுவார் மூர்த்திகள் தேவாரபதிகங்கள், திருவாசகம், சிவபுராணம் பாடல்களை பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வேதாரண்யம் வேதாந்த சுவாமி கோவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் சாமி சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு மாணிக்கவாசகர் சாமி வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாதபண்டார சன்னதி செய்திருந்தார்.