தாத்தா சாமி மடத்தில் குரு பூஜை
ஆம்பூர் அருகே தாத்தா சாமி மடத்தில் குரு பூஜை விழா நடந்தது.;
ஆம்பூர் தாலுகா பாட்டூர் கிராமத்தில் உள்ள பொன்முடி கோடீஸ்வரர் ராமநாத மஹாமடத்தில் பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி கோபூஜை, யாகசாலை பூஜைகள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தாத்தா சுவாமிகளுக்கு கலசாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏழு விதமான வில்வங்களால் வில்வாபிஷேகம், கனகாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு ஸ்ரீகோடி தாத்தாசுவாமி ஆசிர்வாதம் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.