குன்னூர் அருகே செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா

குன்னூர் அருகே செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா;

Update: 2023-06-06 00:30 GMT

குன்னூர்

குன்னூர் அருகே பேரக்ஸ் லர்துபுரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 91-ம் ஆண்டு கரக உற்சவம் விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 1-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. 2-ந் தேதி அருவங்காடு அருகே உள்ள கருப்பராயர் கோவிலில் இருந்து கரகம் அலங்காரம் செய்து தேர்பவனியுடன் கோவில் வந்தடைந்தது. 3-ந் தேதி அம்மன் கரக ஊர்வலம் நடைபெற்றது.

மாவிளக்கு பூஜை, கஞ்சிவார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்பு இறுதி நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் விழா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்