அக்னிவீரர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீரர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கடலூரில் நாளை மறுநாள் நடக்கிறது.;
கடலூர்
அக்னி பாத் திட்டத்தின் அக்னிவீரர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமான படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இணையவழி தேர்வு 13.10.2023-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய 3 நிலைகளை உடையது. இந்த திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.