கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு
மாவட்ட அளவில் கலை போட்டிக்கு கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.;
கூடலூர்,
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. கூடலூர் வட்டார அளவிலான போட்டியில் கூடலூர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிற்பம் செதுக்கும் செய்யும் போட்டியில் 7-ம் வகுப்பு மாணவி அப்ரா அசாத் முதலிடம், ஓவிய போட்டியில் 6-ம் வகுப்பு மாணவி டியானி 2-ம் இடமும் பெற்றனர். இதன் மூலம் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர். இதையொட்டி 2 மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.