கொய்யா, வெங்காயம் சாகுபடி பயிற்சி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில், கொய்யா, வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது.;

Update: 2023-09-10 00:00 GMT

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில், அறிவியல் மையம் மற்றும் அகமதாபாத் தேசிய கண்டுபிடிப்புகள் நிறுவனம் சார்பில், கொய்யா, வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடந்தது. இதற்கு அறிவியல் மையத்தின் தலைவர் பச்சைமால் தலைமை தாங்கி பேசினார். வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார். தேசிய கண்டுபிடிப்புகள் மைய விஞ்ஞானி பார்த்குமார் பி.தவே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, தொழில்நுட்ப வல்லுனர் ராஜாராமன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு வெங்காய விதைகள் வழங்கப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யா சிவசெல்வி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்