மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி சாவு
மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி உயிரிழந்தார்.;
திருமங்கலம்
திருமங்கலம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 63). காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.