தூத்துக்குடி அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான ஒயர்களை திருடிய காவலாளி கைது

தூத்துக்குடி அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான ஒயர்களை திருடிய காவலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-07 12:40 GMT

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 37). இவர் கூட்டாம்புளி பகுதியில் உள்ள ஐ.டி. கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனி வளாகத்தில் இருந்த எலக்ட்ரிக்கல் காப்பர் ஒயர்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த புதுக்கோட்டை மங்களகிரியை சேர்ந்த வேலு மகன் அர்ஜூனன் (48) என்பவர் ஒயர்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அர்ஜூனனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான ஒயர்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்