ஜி.எஸ்.டி. செலுத்துவதாக மோசடி; ஆடிட்டர் கைது

ஜி.எஸ்.டி. செலுத்துவதாக மோசடி செய்த ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-04-22 20:53 GMT

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ஜெகன் என்பவருடைய மகள் கேத்தரின் (வயது 39). இவர் மதுரையில் ரப்பர் நிறுவனத்திற்கான பொருட்கள் செய்யும் கம்பெனி வைத்துள்ளார். இவரது கம்பெனியில் ஆடிட்டராக திருப்பரங்குன்றம் அடுத்த ஹார்விபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (39) உள்ளார்.

இவர் கேத்தரின் நிறுவனத்திற்கு 2021 முதல் 2023 வரையில் ஜி.எஸ்.டி. வரி கட்டுவதாக கூறி ரூ.5 லட்சம் வாங்கி ரூ.3.5 லட்சத்தை கட்டாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கேத்தரின் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அவரின் உத்தரவின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  ஆடிட்டர் செந்தில்குமாரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்