பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய குழு அமைப்பு
சங்கராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வட்டார அளவிலான குழு அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, தஸ்பிகா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செல்லா குழந்தைகளின் வட்டார ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை சேர்க்க தீவிர பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மலர்கொடி, சரசு, புவனேஸ்வரி, ஸ்டாலின், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.