நிலநீர் விழிப்புணர்வு முகாம்
வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலநீர் விழிப்புணர்வு முகாம் நடந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் அரசு நீர்வளத்துறை சார்பில் நிலநீர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைமணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அருள் சம்பந்தம், சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தஞ்சாவூர் நிலநீர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் அங்கயற்கண்ணி, நிலவியலாளர்கள் கார்த்திக், ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துகளை படத்துடன் விளக்கி பேசினர். இதில் ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், உஷா, சங்கர், வரதராஜன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.