குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரர் கைது
குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார். கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.;
வாணாபுரம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மேற்பார்வையில் வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் தண்டரை பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா உள்ளிட்டவைகள் விற்கப்படுகிறதா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சபரிவாசன் (வயது 38) என்பவரின் மளிகை கடையில் குட்கா, புகையிலை உள்ளிட்டவை மறைத்து வைத்திருந்தார்.
இதனையடுத்து சபரிவாசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சபரிவாசன் நடத்தி வந்த மளிகைக்கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.