மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.;
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.முன்னதாக, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சீர்காழி தாலுகா, ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துர்காதேவி என்பவருக்கு ரூ.6690 மதிப்பில் விலையில்லா தையல் எந்திரத்தையும், மாவட்ட தாட்கோ மூலம் தரங்கம்பாடி தாலுகா, அரசூர் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி, சுதா ஆகிய 2 பேருக்கு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டையையும் கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.