ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வுக்கூட்டம்

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-06-13 09:16 GMT

ஆரணி

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வுக்கூட்டம் நடந்தது.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா வை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமார வேலு தலைமை தாங்கினார்.

ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கலந்து கொண்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறை இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிகளுக்கு செல்வதற்கான சாய்வு தள வசதி ஏற்படுத்தி தர வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலைகளை வழங்கப்படுவதில்லை, அரசு பஸ்களில் பயணம் செய்யும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் இல்லை என்றாலும் நடத்துனர்கள் இருக்கைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் பேசினர்.கூட்டத்தில் கலசபாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர்கள் ஜெகதீசன், வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, மண்டல துணை தாசில்தார் ஜெயலட்சுமி உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்