மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது

Update: 2023-05-13 11:21 GMT

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்