சேலம் கலெக்டர் அலுவலகத்தில்திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம்

Update:2023-09-05 02:12 IST

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 30 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் கலெக்டர் கூறும் போது, ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்