மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வுநாள் கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது.;
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பணி மேற்பார்வையாளர் அன்பரசி, இளநிலை உதவியாளர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய அட்டை வழங்க வேண்டும். மாட்டு கொட்டகை, ஆட்டு கொட்டகை போன்றவற்றை அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில், ''இந்த மாதம் இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் வேலை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கோரிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்யப்படும்'' என்றார்.