சாதனை வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
உலக தடகள சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் 4 X 400 மீ தொடர் ஓட்டப்போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலக தடகள சாப்பியன்ஷிப் தொடர் ஓட்டம் பிரிவில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு வீரர் ராஜேஷ்,ரமேஷ் உட்பட அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.