மயான கொள்ளை திருவிழா பணிகள் தீவிரம்
வேலூரில் மயான கொள்ளை திருவிழா பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடும் வகையில் மயானக் கொள்ளை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூரில் வருகிற 19-ந் தேதி நடைபெறும் மயான கொள்ளை விழாவுக்காக மக்கான் அம்பேத்கர் நகர், விருதம்பட்டு, ஓல்டு டவுன், தோட்டப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அங்காளம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பிரமாண்ட புஷ்ப பல்லக்குகள், தேர்கள் அலங்கார செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் விழா நடைபெறும் இடமான புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்றில் மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டு அங்கு அங்காளம்மன் உருவம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முன்னோர்களை வழிபடுவதற்காக குடும்பத்தினர் பல்வேறு வேடமிட்டு பாலாற்றங்கரைக்கு வருவார்கள். வேடம் அணிவதற்கான பொருட்களை தயார் செய்தும் வண்ணம் தீட்டும் பணியிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.