பசுமை குடில் அமைக்க மானியம்

பசுமை குடில் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.;

Update: 2023-09-28 18:45 GMT

தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க 500 சதுர மீட்டர் அளவில் பசுமை குடில் அமைத்து காய்கறி உற்பத்தி செய்ய ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 750 மற்றும் நிழல்வலை குடில் அமைக்க ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் வருடம் முழுவதும் காய்கறிகளை உற்பத்தி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

ேமலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாமல் தரமான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். குறைந்த வெப்பநிலையில் வளரக்கூடிய பயிர்களையும் உற்பத்தி செய்யலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் மண்டபம், திருப்புல்லாணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை 9080246728 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெகதீசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்