அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது.;

Update: 2023-09-30 17:23 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடத்திட வேண்டும். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வேண்டும். கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்