193 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி 193 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் கலெக்டர் தகவல் தெரிவித்தார்
நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளில் காந்தி ெஜயந்தி நாளில் வருகிற 2-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள், ஜல்ஜீவன் திட்டம், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விவாதங்கள் நடைபெறும்.கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.