கிராமசபை கூட்டம்

பேட்டை பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது.;

Update: 2022-08-17 19:19 GMT

பேட்டை:

பேட்டை ரூரல் பஞ்சாயத்து மைலப்பபுரத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேட்டை ரூரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடீஸ்வரன் நகரை நெல்லை மாநகராட்சியுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊர் நிர்வாகிகள் கிட்டு, சிவசுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர் ரஞ்சிதம், பேட்டை கால்நடை மருத்துவர் ரேவதி, தலைமை ஆசிரியர் தேவி ஸ்ரீ, கிராம நிர்வாக அலுவலர் ராஜா அங்கப்பன், கிராம நிர்வாக உதவியாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் சின்னத்துரை தேசிய கொடி ஏற்றினார். 

Tags:    

மேலும் செய்திகள்