உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபை, பகுதிசபை கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபை, பகுதிசபை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-02 19:08 GMT

நெல்லை:

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதி சபை கூட்டம், ராஜாகுடியிருப்பு புகழ்துணை நாயனார் தெருவில் நடந்தது. தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கினார். இதில் தெருவிளக்குகள், புதிய சாலை, கழிப்பறை வசதி, முதியோர் உதவித்தொகை போன்றவை கேட்டு பொதுமக்கள் மனு வழங்கினர். சபைக்குழு தலைவர் பாபுகுமார், தி.மு.க. மாநகர துணை செயலாளர் மூளிக்குளம் பிரபு, வட்ட செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பணகுடி பேரூராட்சி 16-வது வார்டு சபை கூட்டம், பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன் தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ், துணைத்தலைவர் சகாயபுஷ்பராஜ், கவுன்சிலர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நாங்குநேரி யூனியன் தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் சமாதானபுரத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜே.அருள்ராஜ் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பஞ்சாயத்து செயலாளர் டி.ராமன் நன்றி கூறினார்.

பரப்பாடி அருகே பாப்பான்குளம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம், தலைவர் எஸ்.ஆர்.முருகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இசக்கித்தாய், பற்றாளர் ராம்மோகன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, சுகாதார செவிலியர் முத்தம்மாள், பஞ்சாயத்து செயலாளர் சொ.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்பை யூனியன் மன்னார்கோவில் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம், தலைவர் ஜோதி கல்பனா பூதத்தான் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் நிர்மலா சங்கர், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள் சண்முககுட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் தலைவர் பரணி சேகர், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பன், தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பூதத்தான், வட்டார காங்கிரஸ் தலைவர் சண்முககுட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். திடக்கழிவு மேலாண்மை ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

வீரவநல்லூர் பேரூராட்சி 12-வது வார்டு அணைக்கரை பிள்ளையார் கோவில் தெருவில் பகுதி சபை கூட்டம், பேரூராட்சி தலைவர் சித்ரா தலைமையில் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வீரவநல்லூர் மெயின் பஜாரில் சிமெண்டு சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர் அனந்தராமன், பகுதி உறுப்பினர்கள் காரல்மாக்ஸ் கணேசன், மாரியப்பன், இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை யூனியன் அயன்சிங்கம்பட்டி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம், தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன், பஞ்சாயத்து துணைத்தலைவர் சுடலை அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் பஞ்சாயத்தில் நடைபெற்று முடிந்த பணிகளையும், நடைபெற உள்ள நலத்திட்ட பணிகளையும் விளக்கி கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு நேரடி விதை விதைக்கும் கருவிகளையும், உளுந்து விதைகளையும் மானியமாக வழங்கினர். திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

சேரன்மாதேவி, வீரவநல்லூர், பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், முக்கூடல் பேரூராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. வீரவநல்லூர் பேரூராட்சியில் தலைவி சித்ரா சுப்பிரமணியன் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் சத்யதாஸ், துணைத்தலைவர் வசந்தசந்திரா, கவுன்சிலர்கள் சந்திரா, கீதா, தெய்வநாயகம், சிதம்பரம், தாமரைச்செல்வி, அப்துல்ரகுமான், வெங்கடேஸ்வரி, முத்துக்குமார், சந்தானம், அனந்தராமன், ஆறுமுகம், கங்கா ராஜேஸ்வரி, சண்முகவேல், அங்கம்மாள், கல்பனா, சின்னத்துரை, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியிலுள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்