வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரிகள் மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்டப் பணிகளுக்கான வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-21 18:45 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரிகள் மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்டப் பணிகளுக்கான வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேலாளர் பணி

மயிலாடுதுறை மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு கொள்ளிடம் மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் காலியாக உள்ள 2 வட்டார இயக்க மேலாளர் பணியிடங்கள்.செம்பனார்கோவில்-2, மயிலாடுதுறை-1, குத்தாலம்-2 ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் வயது 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி பட்டதாரியாக இருக்க வேண்டும். கணினி அறிவியலில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலாளர் பணிக்கு மைக்ரோ சாப்ட்வேர் 6 மாத காலம் பயின்ற சான்றும், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மைக்ரோ சாப்ட்வேர் 3 மாத காலம் பயின்ற சான்றும் பெற்றிருக்க வேண்டும். வாழ்வாதார திட்டப்பணிகள் குறித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

25-ந் தேதி கடைசி நாள்

எழுத்து தேர்வில் 60 சதவீதத்திற்கு (45 மதிப்பெண்கள்) அதிகமாக பெறும் நபர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த பணியிடங்களுக்கு வருகிற 25-ந் தேதி வரை (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி திட்ட இயக்குகர், மகளிர் திட்டம், கச்சேரி ரோடு, கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், மயிலாடுதுறை என்பதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்