பட்டதாரி இளம் பெண்தூக்கு போட்டு தற்கொலை
முள்ளக்காட்டில் பட்டதாரி இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் அனிதா (வயது21). பி.காம் பட்டதாரி. இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனிதா தனக்கு தற்பொழுது திருமணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.