பட்டதாரி பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

பட்டதாரி பெண் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-06-06 19:52 GMT

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கிள்ளனூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ராதிகா(வயது 23). பட்டதாரியான இவர் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் உள்ள மதுபான ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், உடையாளிப்பட்டி போலீசில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து ராதிகா கடத்தப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்