அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி

அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி

Update: 2023-07-25 11:49 GMT

திருப்பூர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் ஏ.ராணி தலைமையில் கவன ஈர்ப்பு பேரணி நடந்தது. திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை நடந்த இந்த பேரணியை அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பயனளிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சரண் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது. 


Tags:    

மேலும் செய்திகள்