கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்
மன்னார்குடி- சித்தாம்பூர் வழியாக கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.;
கூத்தாநல்லூர்:
மன்னார்குடி- சித்தாம்பூர் வழியாக கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு பஸ் இயக்கப்பட்டது
மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்தாம்பூர் வழியாக கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.
இதனால், நாலாநல்லூர், சித்தாம்பூர், விழல்கோட்டகம், வெள்ளக்குடி, அத்திக்கடை, பொதக்குடி, கொரடாச்சேரி, கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் மன்னார்குடி, திருவாரூர், கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளுக்கு சென்று வர ஏதுவாக இருந்தது.
குண்டும்,குழியுமான சாலை
இந்த நிலையில், மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள சாலை குண்டும்,குழியுமாக இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட தூரம் சென்று பஸ் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டும், குழியுமாக இருந்த சாலை சற்று அகலப்படுத்தி முழுமையான தார்சாலையாக போடப்பட்டது. அதனால் இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளது.
மீண்டும் இயக்க கோரிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் மன்னார்குடியில் இருந்து நாலாநல்லூர், சித்தாம்பூர், வேளச்சேரி வழியாக கொரடாச்சேரி வரை சென்று வரும் வகையில் மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று அப்பகுதி ெபாதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வலியுறுத்து வருகின்றனர்.