மின்வாரியத்தின் அலட்சியத்தால் காலை இழந்த ஜூடோ வீரருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்: விஜயகாந்த்
மின்வாரியத்தின் அலட்சியத்தால் காலை இழந்த ஜூடோ வீரருக்கு அரசு வேலை வழங்கவேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
மின்வாரியத்தின் அலட்சியத்தால் காலை இழந்த ஜூடோ வீரருக்கு அரசு வேலை வழங்கவேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;
"விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது. மாணவர் பரிதி விக்னேஸ்வரனுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும்.
மேலும் கவனக்குறைவாக செயல்பட்டு மாணவரின் கால் பறிபோக காரணமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.