அரசு பள்ளி மாணவ-மாணவி மாநில போட்டிக்கு தேர்வு

அரசு பள்ளி மாணவ-மாணவி மாநில போட்டிக்கு தேர்வு;

Update: 2022-12-22 18:45 GMT

தேவகோட்டை

சிவகங்கையில் மாவட்ட அளவில் ஆக்ஸ்போர்டு பள்ளியில் மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டி நடந்தது. இதில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாச்சாங்குளம் மாணவர்கள் மாளவிகா கவிதை புனைதல் போட்டியிலும், விபின் சந்துரு வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியிலும் கலந்துகொண்டு முதலிடம் பெற்றனர். 8-ம் வகுப்பு மாணவி மாளவிகா, மாணவன் விபின்சந்துரு இருவரும் மாநில அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பள்ளி மாணவர்கள் இருவரையும் வட்டார கல்வி அலுவலர்கள் லெட்சுமி தேவி மாலதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கார்த்திகேயன், ஆசிரியர் பயிற்றுனர் ராஜசேகர், பிசியோதெரபிஸ்ட் மகேந்திரன், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்