அரசு பள்ளி மாணவர் தேர்வு

மாவட்ட கிரிக்கெட் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்;

Update: 2023-07-12 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலநிதி மாவட்ட அளவிலான 16 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். தேர்வான மாணவர் பாலநிதியை பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர்லெமாயூ, உதவி தலைமை ஆசிரியர் பாரதிதாசன், உடற்கல்வி ஆசிரியர் முத்து மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் குழுவினர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்