கோவில்பட்டி அரசு பள்ளியில்அறிவியல் கண்காட்சி
கோவில்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி வ. உ. சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முப்பெரும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கோவில்பட்டி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜான்சன், பள்ளி உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்.