அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜிவேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். மாநில துணைத்தலைவர் தண்டபாணி, கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் முனுசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஞானமணி, பீட்டர், தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் கோவிந்தன், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன், இணை செயலாளர் ஆனந்தசக்திவேல், அமைப்பு செயலாளர் ஆனந்தவேல், மகளிர் அணி செயலாளர் பவானி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, சுரேஷ், கார்த்திகேயன், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கலையரசன் நன்றி கூறினார்.