அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார்.மதுரை சுகாதார அலுவலரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவர் பணி சுமை, மகப்பேறு மரண தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.