அரசு பஸ்சை 2 முறை இயக்க வேண்டும்

அரசு பஸ்சை 2 முறை இயக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-12-15 18:08 GMT

ஆற்காடு பணிமனைக்கு உட்பட்ட தடம் எண்:487 அரசு பஸ் வேலூரில் இருந்து அரக்கோணம் வரை தினமும் காலை, மாலை என 2 முறை இயக்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு அந்த பஸ் காலை ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மாலையில் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே இயக்கியபடி காலை, மாலை என 2 முறை பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்