தங்கரதம் இழுத்து கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு

Update: 2023-08-24 19:45 GMT

கவர்னர் வருகை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று கோவையில் இருந்து கார் மூலம் பழனி வந்தார். கோவில் தங்கும் விடுதியான தண்டபாணி நிலையத்துக்கு வந்த அவரை மாவட்ட கலெக்டர் பூங்கொடி, திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கவர்னருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தண்டபாணி நிலையத்தில் இருந்து மின்இழுவை ரெயில்நிலையம் வந்தார். அதன்பிறகு மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆனந்த விநாயகரை வழிபட்டு மூலவர் சன்னதிக்கு சென்றார். அங்கு முருகப்பெருமானை அவர் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது.

தங்கரதம் இழுத்து வழிபாடு

அதன்பிறகு உட்பிரகாரத்தில் உள்ள போகர் சித்தர் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார். அதையடுத்து தனது மனைவியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தங்கரதம் இழுத்து வழிபட்டார். பின்னர் மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரம் வந்து, காரில் தண்டபாணி நிலையம் வந்தடைந்தார்.

அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அவர் தனது மனைவியுடன் காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் வருகையையொட்டி, பழனியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்