ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை
நேருவின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
சென்னை,
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேருவின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் உள்ள நேருவின் உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நேருவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.