'கவர்னர் ஆர்.என்.ரவி மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல் பேசி வருகிறார்' - டி.ஆர்.பாலு எம்.பி. பேச்சு
சனாதன கொள்கை தான் காலாவதி ஆகிவிட்டது என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.;
காஞ்சிபுரம்,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மிகப்பெரிய அராசியல்வாதி போலவும், தத்துவ ஞானி போலவும் பேசி வருவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;-
"இன்று அதிகாரத்தில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, தான் எதற்காக வந்தோம் என்பது தெரியாமல் மிகப்பெரிய மனிதரைப் போலவும், மிகப்பெரிய அரசியல் வாதியைப் போலவும், தத்துவ ஞானி போலவும் பேசி வருகிறார். திராவிட மாடல் காலாவதி ஆகவில்லை. சனாதன கொள்கை தான் காலாவதி ஆகிவிட்டது" என்று அவர் கூறினார்.