'எனக்கு விளம்பரம் தேவையில்லை' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Update: 2022-06-30 06:50 GMT

சென்னை,

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார். இன்று காலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ராணிப்பேட்டையில் 71,103 பயனாளிகளுக்கு ரூ.260 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தோல் பொருள் ஏற்றுமதியில் உலக கவனத்தை ஈர்க்கும் மாவட்டமாக ராணிப்பேட்டை உள்ளது.

அமைச்சர் காந்தி கைத்தறி துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதிய மாவட்டமான ராணிப்பேட்டை ஒரு காலத்தில் ராணுவப்பேட்டையாக இருந்தது.

விளிம்பு நிலை மக்களின் அடிப்படை தேவைகளை திமுக அரசு தீர்த்து வருகிறது. விளிம்பு நிலை மக்களின் மகிழ்ச்சியில் தான் திமுக அரசின் இதயம் உள்ளது. எனக்கு விளம்பரம் தேவையில்லை. விளம்பரத்திற்காக எந்த திட்டங்களையும் திமுக அரசு செய்யவில்லை. அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசாகும்.

இவ்வாறு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்