அரசு டவுன் பஸ் இயக்க கோரிக்கை

அரசு டவுன் பஸ் இயக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-25 18:31 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோட்டியால் கிராம பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். தினமும் கல்லூரி செல்வதற்காக அவர்களை தா.பழூர் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் கொண்டுவந்து பஸ்சில் அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவப்போது விபத்து ஏற்படுகின்றது. மேலும் தற்போது பருவமழை காலம் என்பதால் இருசக்கர வாகனத்தில் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான கும்பகோணம் முதல் சுத்தமல்லி வரை தா.பழூர் வழியாக டவுன்பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்