செய்தித்துறை அரசு செயலாளர் செல்வராஜ் ஆய்வு

நெல்லை மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் செய்தித்துறை அரசு செயலாளர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.;

Update: 2022-12-23 22:35 GMT

நெல்லை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளருமான செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு தலைமையில் நேற்று ஆய்வு செய்தார்.

அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவின் வகைகள் குறித்தும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு, உதவி கலெக்டர் சந்திரசேகர், மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த பள்ளி மாணவர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக கற்றல் திறனை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பெருமாள்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்து பொருட்கள் போதுமானதாக இருப்பு உள்ளதா? என்றும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்