காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-01-12 19:53 GMT

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அழகன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். காலியாக உள்ள ஆயிரத்து 350-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வழியாக உடனடியாக நிரப்ப வேண்டும், துணை இயக்குனர் சுகாதார பணிகள் மருந்து கிடங்குகளில் மருந்து மற்றும் தடுப்பு ஊசி மருந்துகளை பராமரித்திட தலைமை மருந்தாளுனர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்