அரசு விடுதியில் மாணவிகளிடம் அபராதம் விதிப்பதாக கலெக்டரிடம் புகார்

அரசு விடுதியில் மாணவிகளிடம் அபராதம் விதிப்பதாக கலெக்டரிடம் புகார் ெதரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-12-01 18:45 GMT

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி ஒருவர், 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு புகார் கொடுத்தனர். அதில், "ஆண்டிப்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் மாணவிகளை பாத்திரம் கழுவச் சொல்கின்றனர். தினமும் பல்வேறு காரணங்களை கூறி மாணவிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வோம் என்று மிரட்டல் வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்