அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை
அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை சமாதானபுரம் காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது45). இவர் கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.