அரசு மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாடு

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடந்தது. இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-15 19:00 GMT

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடந்தது. இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில மாநாடு

தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு தூத்துக்குடியில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் நடேசராஜா தலைமை தாங்கினார். இணைச் செயலர் சுபைராபானு முன்னிலை வகித்தார்.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் என்.வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார்.

கனிமொழி எம்.பி.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மகாராஜன், மாநில பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தீர்மானங்கள்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் தினக்கூலி அடிப்படையில் பணியில் உள்ள 63 தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு ஒருமுறையாவது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஊழியர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். மீன்வள மேற்பார்வையாளர்கள் தரம் 1, 2 பணியிடங்கள் சமநிலையில் இருக்க வேண்டும்.

மேலும், பதவி உயர்வு காலதாமதம் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவிகளுக்கான மூப்புநிலை பட்டியலை உரிய காலத்தில் தயாரித்து வெளியிட்டு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது போன்ற 14 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் செல்வம் நிறைவு உரையாற்றினார். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் சேரந்தையராஜா நன்றி கூறினார். இந்த மாநாட்டில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்