அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகி டெல்லி அப்பாதுரை தலைமை தாங்கினார். சிவக்கொழுந்து, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் கலந்துகொண்ட அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும், அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு நேரடியாக நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகி தணிகைவேல், கேசவன், சுரேந்தர், சேகர்ராஜி உள்பட ஊராட்சி தூய்மை காவலர்கள், பணியாளர்கள், குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்