தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலை பணியாளர்களின் பணிநீக்க காலத்தை பணி வரன்முறை செய்து 41 மாத ஊதிய இழப்பை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.