அரசு ஊழியர்கள் போராட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-12-29 18:45 GMT

 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட தலைவர் உடையாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, அகவிலைப்படி 4 சதவீதம் உடனடியாக வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப்பலனை உடனே வழங்கவேண்டும், மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்